Wednesday, March 27, 2013

மூலிகை மருத்துவம்


மூலிகை மருத்துவம்


தலைவலி:- வெற்றிலையின் காம்பு, லவங்கம், ஏலரிசி ஆகியவற்றை சம அளவாக எடுத்து பால் கலந்து அரைத்து, சூடாக்கி கொதிக்க வைத்து நெற்றிப் பொட்டிலும் உச்சந்தலையிலும் போட்டுவர கடுமையான தலைவலி விலகும்.

இருமல்: சித்தரத்தையை வாயில் அடக்கி கொண்டால் இருமல் குணமாகும். இதனைக் கஷாயம் வைத்து சாப்பிடலாம்.

மாலைக்கண்: கருந்துளசி இலையை கசக்கி பிழிந்து, சாறு எடுத்து ஒரு கண்ணுக்கு இரண்டு துளி வீதம் காலை, மாலை தொடர்ந்து ஏழு நாட்கள் விட்டால் மாலைக்கண் நீங்கி பார்வை நன்றாக தெரியும்.

ஒற்றைத்தலைவலி வந்தால் எலுமிச்சம் பழத்தோலை எடுத்து நைசாக அரைத்து தடவி வந்தால் நீங்கி விடும்.

பசி :- நில வேம்பு, வேப்பம்பட்டை இவற்றுள் ஏதாவது ஒன்றை கஷாயம் வைத்துக் குடித்து வந்தால் நன்றாகப் பசி எடுக்கும்.

மண்டை குடைச்சல் தீர: நொச்சி இலையை, தலையணையாகப் பயன்படுத்த குணமாகும்.

உடல் அரிப்பு நீங்க: வண்ணி மரத்தின் இலையைப் பசும் பால் விட்டு அரைத்து, தினசரி 1 அவுன்ஸ் சாப்பிட குணமடையும்.

நன்றாக பசி எடுக்க: விளாம்பழத்தின் கொழுந்து இலைகளைக் கஷாயம் வைத்துக் குடிக்கவும்.

வயிற்றுக்கடுப்பு நீங்க: அரச இலை கொழுந்தை மோருடன் அரைத்து மோரில் கலந்து சாப்பிடலாம்.

வழுக்கை மறைய: வெங்காயம், செம்பருத்தி பூவுடன் சேர்த்து அரைத்து வழுக்கை மீது தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.

மூளை சுறுசுறுப்பாக இயங்க: வல்லாரை சாறில் ஊறவைத்து உலர்த்திய திப்பிலியைச் சாப்பிட குணமாகும்.

ஆஸ்துமா குணமாக: முசுமுசுக்கைச் சாறு நல்லெண்னையுடன் காய்ச்சி வாரம் ஒரு முறை தலை முழுகி வர பலன் உண்டு.

நெறிகட்டிகள் சரியாக: தழுதாழை இலையைச் சாறு பிழிந்து அதை ஆலிவ் எண்ணையில் வதக்கிக் கட்ட குணமாகும்.

பல்வலி குணமாக: நந்தியாவட்டை வேரை வாயில் போட்டு மென்று துப்பினால் விரைவில் குணமாகும். வீக்கம், வலி போக: ஓமத்தை நீர்விட்டு அரைத்துக் களிபோல கிளறி இளஞ்சூட்டில் பற்று போட்டால் சரியாகிவிடும்.

உடற்சோர்வு சரியாக: கோதுமை மாவில் கஞ்சி வைத்து மாதவிடாய்க் காலங்களில் சாப்பிட கைமேல் பலன்.

எலும்பு வலுப்பெற: கோபுரம் தாங்கி செடி வேரை நிழலில் உலர்த்தி பொடி செய்து கற்கண்டு பொடி நெய் சேர்த்து காலை, மாலை சாப்பிட வேண்டும்.

நாக்கில் புண் ஆற: அகத்தி கீரையை அலசி சுத்தம் செய்து அவித்த அந்த ரசத்தை 3 வேளை சாப்பிட்டால் குணமாகும்.

குடல் புண் ஆற: வில்வபழத்தை பொடி செய்து கால் கிராம் சாப்பிட்டால் விரைவில் பலன் கிடைக்கும்.

உடல் வலிமை பெற: அருகம்புல் சாறு தேன் கலந்து சாப்பிட்டு வர ஊளை சதை குறையும். உடல் வலிமை பெறும்.

அஜீரணம் சரியாக: ஒரு டம்பளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் இம்மூன்றையும் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க நிவர்த்தியாகும்.

மூட்டு வலி குணமாக: அத்தி பாலை எடுத்து பற்றுப் போட்டால் விரைவில் குணமடையும்.

இரும்புச் சத்துக்கு: மாதுளம்பழச் சாற்றில் பால் சேர்த்து சாப்பிட்டால் இரும்புச் சத்து கிடைக்கும்.

சிறுநீரக கோளாறு: முள்ளங்கியை சாறு எடுத்து தினமும் காலை, மாலை 30 மி.லி. சாப்பிட நீங்கும்.

No comments:

Post a Comment